காதலியின் தாய் போட்ட பக்கா பிளான்..காதலனை துடிதுடிக்க அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர்கள்!
Girlfriend s mothers plan Autorickshaw drivers stab boyfriend to death
மராட்டிய மாநிலம் அருகே வாலிபரை கொன்று விபத்து நாடகமாடிய காதலியின் தாய் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற 25 வயது வாலிபர்அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபர் பாலாஜி விபத்தில் சிக்கியதாக கூறி ஆட்டோ டிரைவர்கள் தினேஷ், ஆதித்யா ஷிண்டே ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அப்போது அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார்.
இதையடுத்து நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலாஜி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்போது சந்தேகத்தின் பேரில் ஆட்டோ டிரைவர்கள் தினேஷ், ஆதித்யா ஷிண்டேவை பிடித்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போதுதான் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
விசாரணையில் அவர்கள் கூறியதாவது:கொலையான பாலாஜி, காதலியான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதன் காரணமாக சிறுமி மனஉளைச்சல் அடைந்ததாகவும் தெரிவித்தனர் .மேலும் இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் ரேகா, பாலாஜியை கொலை செய்ய சதி திட்டம் போட்டார் என்றும் அதன்படி கடந்த 17-ந்தேதி சிறுமியின் வீட்டிற்கு வந்த பாலாஜியை ரேகா தனது கூட்டாளிகளான ஆட்டோ டிரைவர்கள் தினேஷ், ஆதித்யா ஷிண்டே உள்பட 4 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிவித்தனர்.
அப்போது இதில் படுகாயமடைந்த பாலாஜியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, அவர் விபத்தில் சிக்கியதாக கூறி நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து போலீசார் சிறுமியின் தாய், ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Girlfriend s mothers plan Autorickshaw drivers stab boyfriend to death