அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் ஹெலிகாப்டர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் ஹெலிகாப்டர் - நடந்தது என்ன?

ஏராளமான ஆன்மிக தலங்கள் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆன்மிக சுற்றுலா மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக கேதர்நாத் கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

அப்படி வரும் பக்தர்களின் வசதிக்காக கேதார்நாத் கோயிலில் இருந்து குப்த்காசி வரை தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலில் இருந்து குப்த்காசி நோக்கி ஹெலிகாப்டர் ஒன்று ஐந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக கேதார்நாத் கோயில் அருகே தரையிறக்கப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்துத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மோசமான வானிலையின் போது ஹெலிகாப்டர் கிளம்பியதே இந்த சம்பவத்திற்கு காரணம். இருப்பினும் இந்த விசாரணையின் முடிவிலேயே இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

helicoptar emergency landing near ketharnath temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->