ஆப்கானிஸ்தானுக்கு 20,000 மெட்ரிக் டன் தானியங்கள்..! மீண்டும் உதவிகரம் நீட்டும் இந்தியா.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. மேலும் தலிபான்களின் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்காதால் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் தானிய ஏற்றுமதிகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் உணவு பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பின்மையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே, இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மனிதநேய அடிப்படையில் 50,000 மெட்ரிக் டன் தானியங்களை வழங்குவதாக அறிவித்திருந்தது. இதன்படி முதல் கட்டமாக கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு 40,000 மெட்ரிக் டன் கோதுமையை ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் 20,000 மெட்ரிக் டன் தானியத்தை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது ஏற்கனவே அறிவித்திருந்ததை விட 10000 மெட்ரிக் டன் அதிகமாகும். இதில் முதல் தவணையாக 2500 மெட்ரிக் டன் கோதுமை ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக இந்த வாரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த தவணை தானிய ஏற்றுமதி மூன்று மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India sends 20000 metric tons of grain to Afghanistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->