நின்றுகொண்டிருந்த ஜே.சி.பி. கால்வாய்க்குள் விழுந்தது எப்படி?. - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு ராஜாஜிநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில், இன்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. 

அப்போது மைதானத்தையொட்டியுள்ள கால்வாய் மீது ஜே.சி.பி. எந்திரம் நின்று கொண்டு இருந்தது. எந்திரத்தின் பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் இடிந்து ஜே.சி.பி. எந்திரம் கால்வாய்க்குள் விழுந்தது. 

இதனால் ஜேபிசி எந்திரத்தின் கண்ணாடியில் விரிசல் விழுந்தது மட்டுமல்லாமல் டிரைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர்  பொக்லைன் மூலம் ஜே.சி.பி. எந்திரம் மீட்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JCB machine down in Canal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->