கர்நாடகா : 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா : 7வது ஊதியக் குழுவை அமல்படுத்தக் கோரி பெங்களூருவில் உள்ள புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) வளாகத்தில் அம்மாநில அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநில அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாத பட்சத்தில், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று கர்நாடக அரசு ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 
குறைந்தபட்சம் 40 சதவீத பிட்மென்ட் வசதிகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ள அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.

அவர்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று,  5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில், திட்டமிட்டபடி கர்நாடகா முழுவதும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த முதல்வர் பசவராஜ் பொம்மை முடிவெடுக்கும் வரை போராட்டத்தின் முடிவை திரும்பப் பெற மாட்டோம் என்று அரசு ஊழியர்கள் சற்றுமுன் செய்தியர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மேலும், முதலமைச்சருக்கு இதுகுறித்து மனு கொடுத்துள்ளதாகவும், அரசின் முடிவுக்காக காத்திருப்போம் என்றும் அரசு ஊழியர் சங்கத் தலைவர் சிஎஸ் ஷடாக்ஷரி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka State Government Employees hold a protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->