கடையடைப்பு போராட்டத்தை வன்முறையாக மாற்றிய இஸ்லாமிய அமைப்பினர்! மாநில அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம்..! - Seithipunal
Seithipunal


பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், பண உதவி மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ததாகவும் எழுந்த புகாரில், நாடு முழுவதும் நேற்று என்ஐஏ அதிகாரிகள் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதனால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாஅமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பின் படி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பல்வேறு இடங்களில் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால், சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கல்வீசி தாக்கியதில் போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர். 

இதன்பின்னர், கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த விசாரணையில்  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு கேரளா நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. 

இதுகுறித்து நீதிமன்றம் தெரிவித்ததாவது, கடையடைப்பு போராட்டத்திற்கு முன்பே தடை விதிக்கப்பட்டதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. 

பந்த் போராட்டத்திற்கு தடை விதித்த நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வன்முறையை தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம் என்றும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala banth violence change high court case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->