கேரள பாரம்பரியத்தோடு வந்த பிரதமர் மோடி! திருமணத்தில் ஒன்றுகூடிய சூப்பர் ஸ்டார்கள்!
KERALA PM MODI VISIT AND MEET MOHANLAL MAMMOOTY
இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் நேற்று மேற்கொண்டார். அங்கு நடந்த நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்திலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நேற்று காலை குருவாயூருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடை அணிந்து கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தொடர்ந்து கிருஷ்ணர் கோவில் திருமண மண்டபத்தில் நடிகரும் பாஜக பாஜகவின் முன்னாள் சுரேஷ்கோபியின் மகள் பாக்யா - மணமகன் ஸ்ரேயாஸ் மோகன் திருமணத்தில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் கேரள மாநில திரை துறையை சேர்ந்த உச்ச நட்சத்திரங்கள் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்டப் பல்வேறு நடிகர்களும், அம்மாநில அரசில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
KERALA PM MODI VISIT AND MEET MOHANLAL MAMMOOTY