கடற்கரையில் அலைகளுடன் மிதக்கும் பாலம்: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
Kerala varkala beach floating bridge
கேரளா, திருவனந்தபுரம் அருகே உள்ள வர்ககலா கடற்கரை நீந்துவதற்கும் சூரிய குளியலுக்கும் ஏற்றதாக உள்ளது. இதனால் இந்த கடற்கரைக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் இந்த கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம், கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் முடிவில் 11 மீட்டர் நீளம் மற்றும் 7 மீட்டர் அகலத்தில் பார்வையாளர்கள் என்று கடல் அல்லது ரசிக்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை மாநில சுற்றுலாத்துறை மற்றும் திருவனந்தபுரம் மாவட்டம் சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். மிதக்கும் பாலத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் செல்ல முடியும். தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று ராசிக்கலாம்.
மிதக்கும் பாலத்தின் நுழைவு கட்டணம் ரூ. 120 ஆக நினைக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் 20 நிமிடங்கள் பாலத்தில் நேரத்தைச் செலவிடலாம்.
மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி லைஃப் ஜாக்கெட்டுகள், பாதுகாப்பு படகுகள், உயிர்காக்கும் காவலர்கள், மீனவர்கள் ஆகியோர் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
English Summary
Kerala varkala beach floating bridge