மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு... கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
KeralaHC dismissed Mohanlal plea in elephant ivory case
கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை பொழுது சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்த நான்கு யானை தந்தங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கேரள அரசு சார்பில் வழக்கை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு பெரும்பாவூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்களது வாதங்களை கேட்க வேண்டும் என இரண்டு பேர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றதால் அரசின் முடிவை பெரும்பாவூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் மோகன்லால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி பகுருதீன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகாரம் இல்லை என உத்தரவிட்டார்.
மேலும் கேரளா அரசு தாக்கல் செய்த மனுவை மறுபரிசனை செய்ய உத்தரவிட்ட கேரளா உயர்நீதிமன்றம் சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று கடுமையான விமர்சனங்களை வைத்ததோடு மோகன்லால் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
KeralaHC dismissed Mohanlal plea in elephant ivory case