பெண்கள் அதிகமாக மது அருந்தும் மாநிலம் எது? வெளியான புள்ளி விவரம்..!
Liqueur woman Indian State top 10
மது மற்றும் போதை பழக்கம் என்பது மிகவும் மோசமானது என தெரிந்தும் நாளுக்கு நாள் இப்பழக்கம் அதிகரித்துத் தான் செல்கிறது. அதிலும் பெண்கள் மது அருந்துவது தான் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் எந்த மாநிலத்தில் பெண்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள் எனப் பார்ப்போம்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் நடத்திய ஆய்வின் படி எந்தெந்த மாநிலத்தில் பெண்கள் மது அதிகமாக அருந்துகிறார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அசாம்: இந்த மாநிலத்தில் பெண்கள் யூனியன் பிரதேசங்களை விட அதிகமாக மது அருந்துகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 15 முதல் 49 வயது பெண்கள் 26.3% மது அருந்துகிறார்கள்.
மேகாலயா: இதில் 15 முதல் 49 வயதுடைய பெண்கள் 8.7 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள். இம்மாநிலத்தில் அசாமை விட பின்னால் இருந்தாலும் தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட மிக அதிகமாக உள்ளது.
அருணாச்சல பிரதேசம்: பெண்கள் மது குடிப்பது குறைவாக இருந்தாலும் 3.3 சதவீதம் பதிவாகியுள்ளது. அதை வயதுடைய ஆண்கள் 59% பேர் மது அருந்துகிறார்கள். இது மற்ற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.
சிக்கிம்: இம்மாநிலத்தில் 15 முதல் 49 வயதுடைய பெண்கள் 0.3% மது அருந்துகிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதில் 19.1 சதவீதம் என்ற அளவிலிருந்து குறைந்து வருகிறது.
சத்தீஸ்கர்: இம்மாநிலத்தில் 0.2 சதவீத பெண்கள் மருந்து அருந்துகிறார்கள். இருப்பினும் 11.4 சதவீதத்திலிருந்து குறைந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட்: இம்மாநிலத்தில் முன்பு 9.9 சதவிகிதத்திலிருந்து, 0.3 சதவீதமாகக் குறைந்துள்ளது பெண்கள் மது அருந்துவது.
திரிபுரா: இம்மாநிலத்தில் 9.6 சதவீதமாக இருந்த மதுக் குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது 0.8% கணிசமாகக் குறைந்துள்ளது.
English Summary
Liqueur woman Indian State top 10