லூதியானா நீதிமன்றம் குண்டுவெடிப்பு வழக்கு: தேடப்பட்ட முக்கிய தீவிரவாதி கைது.!
Ludhiana court bomb blast case Most wanted terrorist arrested in Delhi
லூதியானா நீதிமன்றம் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேடப்பட்ட முக்கிய தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட கீழமை கோர்ட்டு வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிரமாக மேற்கொண்டு வந்த விசாரணையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த லக்பீர் சிங் ரோடின் உத்தரவுபடி, நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் ஹர்பிரீத் சிங் என்பவர் பாகிஸ்தானில் இருந்து வெடிப்பொருட்களை பெற்று வெடிக்க செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பயங்கரவாதியான ஹர்பிரீத் சிங் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்தது.
இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், கோலாலம்பூரில் இருந்து டெல்லி வந்த ஹர்பிரீத் சிங்கை, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
English Summary
Ludhiana court bomb blast case Most wanted terrorist arrested in Delhi