அனைத்து மதங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கும் ஒரு அதிரடி திட்டம் - முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அனைத்து மதங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான புனித யாத்திரைத் திட்டத்தை, இன்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அம்மாநில பட்ஜெட்டில் பல்வேறு இலவச அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில், 

21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகள் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மும்பை பெருநகர் மாநகராட்சி பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் போன்ற அறிவிப்புகள், அம்மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த அறிவிப்புகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. அந்த அறிவிப்பில், "அனைத்து மதங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களும் சொந்தமாகப் புனிதப் பயணம் மேற்கொள்வது இயலாத காரியம். 

சிலருக்கு நிதிப் பிரச்சனை, எப்படிச் செல்வது? என்று அவர்களின் புனித தலங்களுக்கு செல்லும் கனவு கனவாகவே போய்விடுகிறது. அவர்களின் இந்த கனவுகளை நனவாக்க அரசு வழிவகை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு ஏற்று, அனைத்து மதத்தினரும் பயன்பெறும் வகையில் பிரதமரின் "தீர்த்த தர்ஷன் யோஜனா" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharastra Govt Assembly new Announce


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->