காலுக்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை! கதறும் பெற்றோர் - அதிரவைத்த மருத்துவமனை! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் 9 வயது சிறுவனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாப்பூரில் கடந்த 15-ம் தேதி 9 வயது சிறுவன், அவரது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் கீழே விழுந்தான். அதில் அந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது. 

இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் உடனடியாக அந்த சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, அதுக்கான ஏற்பாடுகளை செய்தனர். 

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள்  தவறுதலாக சிறுவனின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன் பின்னர் தவறுதலாக சிகிச்சை மேற்கொண்டதை உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக சிறுவனின் காலில் சிகிச்சையை தொடங்கினர். 

இது‌ குறித்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவமனையின் இந்த அலட்சிய செயல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் இது குறித்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் தெரிவித்திருப்பதாவது, "அந்த சிறுவனுக்கு காலில் காயம் ஏற்பட்டவுடன், ஃபிமோசிஸ் பிரச்சனையும் இருந்தது. இதனால்தான் அந்த சிறுவனுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் அவசரத்தில், ஃபிமோசிஸ் அறுவை சிகிச்சை குறித்து சிறுவனின் பெற்றோருக்கு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம்". இவ்வாறு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எந்த ஒரு அறுவை சிகிச்சைக்கு முன்பும் உரியவரிடம் விபரத்தை கூறி கையெழுத்து பெற்ற பிறகுதான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த நிலையில், பெற்றோர்களிடம் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அந்த சிறுவனுக்கு பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharastra Hospital Wrong Treatment issue


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->