அனைத்து கல்லூரிகளையும் மூட வேண்டும் - மணிப்பூர் அரசு அதிரடி உத்தரவு.!
manipur government order close all colleges for voilence
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல்கள் ஏற்பட்டு வந்தது. இந்த மோதலில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன்பின்னர், கடந்த சில மாதங்களாக அமைதியான சூழல் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில், 11 பேர் உயிரிழந்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே, போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், 5 நாட்களுக்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் நிலைமை மோசமடைந்துள்ளதால், மணிப்பூர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. புதிய தேர்வு காலஅட்டவணையை பற்றி அறிந்து கொள்ள manipuruniv.ac.in என்ற வலைதளத்திற்கு சென்று மாணவர்கள் பார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அடுத்த உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும் என்றும், மறுதேர்வு தேதிகள் பற்றிய அடுத்த அறிவிப்புகளை அறிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வ பல்கலைக்கழக வலைதளம் உள்ளிட்ட வழிகளை தொடர்ந்து தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என்று அனைத்து கல்லூரிகளும் இன்றும், நாளையும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மேனிலை மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான இணை செயலாளர் லைஷ்ராம் டோலி தேவி பிறப்பித்துள்ளார்.
English Summary
manipur government order close all colleges for voilence