சமூக வலைத்தளம் மூலம் பழகி 12 பேரிடம் பணம், நகை கொள்ளையடித்த பெண் கைது.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு சமீபத்தில் முகநூல் மூலம் சங்சாத்ரி என்ற பெயரில் இளம்பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். 

அதன் பின்னர் இருவரும் முகநூல் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்நிலையில், ஒருநாள் அந்த பெண், தொழில் அதிபரை நேரில் சந்திக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார். அதன் படி,  தொழில் அதிபர் கடந்த 21-ந் தேதி அந்த பெண்ணை டோம்பிவிலி, கோனி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்தார். 

அங்கு தொழில் அதிபர் கழிவறைக்கு சென்ற நேரத்தில் அந்த பெண் தொழிலதிபரின் ரூ.4½ லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன், தங்க சங்கிலி, கைகெடிகாரம் மற்றும் உரிமம் பெற்ற துப்பாக்கியை திருடி சென்றுள்ளார். 

கழிவறைக்கு சென்ற தொழிலதிபர் திரும்பி வந்து பார்த்த போது தன்னுடைய பொருட்களுடன் அந்த பெண்ணும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து தொழில் அதிபர் போலீசில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது தொழில் அதிபரிடம் கைவரிசை காட்டிய பெண் மும்பை கார் பகுதியை சேர்ந்த சம்ருதி கடப்கர் என்பதும், அவர் போலி முகநூல் கணக்கு மூலம் பணக்கார ஆண்களிடம் பேசி, அவர்களை தனியாக  வரவழைத்து, அவர்களிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சம்ருதி கடப்கர் கொள்ளையடிக்கும் பொருட்களை கோவாவை சேர்ந்த விலாந்தர் டிக்கோஸ்டா என்பவரிடம் கொடுத்து பணம் பெற்று வருவதும், தொழில் அதிபரிடம் பொருட்களை திருடிய பொருட்களை கொடுப்பதற்கு கோவா சென்றதும் தெரியவந்தது.

இதையறிந்த போலீசார் கோவாக்கு விரைந்து சென்று சம்ருதி கடப்கர் மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் மதிப்பிலான 16 செல்போன், துப்பாக்கி, 6 தோட்டா, இரண்டு கைகெடிகாரம், 290 கிராம் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுல் செய்தனர். 

இதுவரை சம்ருதி கடப்கர் போலி முகநூல் கணக்கு மூலம் பழகி சுமார் பன்னிரண்டு பேரிடம் நகை மற்றும் பணம் பறித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharashtra woman arrested for robbery in social media


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->