ஆந்திராவை அலறவிடும் புதிய காய்ச்சல் - கை, கால் வீக்கத்தால் மக்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கமடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் இருக்கின்றனர்.

இந்த வைரஸ் குறித்து மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என்றுத் தெரிவித்துள்ளனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும் மற்ற அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பரவி 3,4 நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையவில்லை. 4 முதல் 6 வாரங்களுக்கு மக்கள் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்களை நடத்தி பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கை, கால் வீக்கத்துடன் பரவும் இந்த புதிய வைரஸ் காய்ச்சல் ஆந்திராவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new virus fever spread in andira


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->