மீண்டும் அமலுக்கு வந்த பழைய ஓய்வூதிய திட்டம் - மாநில அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மீண்டும் அமலுக்கு வந்த பழைய ஓய்வூதிய திட்டம் - மாநில அரசு அதிரடி உத்தரவு.!

கடந்த 2004 ம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம்  உள்ளிட்ட பலன்கள் தடை செய்யப்பட்டது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

மேலும், பல்வேறு கட்டங்களாக போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம்  மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட சில விதிமுறைகளுடன்  மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "கடந்த 2005 ம் ஆண்டுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டங்களை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.  

மாநிலத்தில் இன்னும், 28 துறைகளில் 35 பிரிவுகளில் ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்களின் பட்டியல் முழுமை அடையாமல் இருப்பதாகவும், செப்டம்பர் 12 ம் தேதிக்குள் அனைத்து துறைகளும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு  தேர்வு செய்யப்பட பணியாளர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old pention scheme again in uttarkhand government employees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->