ஒரே நாடு ஒரே தேர்தல் நிதிச்சுமையை குறைக்கும் - ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை! - Seithipunal
Seithipunal


ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் நிர்வாக திறன் மேலும் மேம்படும் என்றும் நிதிச்சுமை குறையும் என குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இந்திய நாட்டின் 76-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை  பகுதியில் இன்று நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ராணுவ அணிவகுப்புகள் , பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். 

இந்நிலையில், இந்த குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது, நாட்டில் பல ஆண்டுகளாக நிலவி வரும் காலனித்துவ மனப்பான்மையை முற்றிலும் ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் ஆங்கிலேயே காலத்தின் குற்றவியல் சட்டங்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக 3 புதிய கிரிமினல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு,காலனித்துவ மனப்பான்மையில் இருந்து மாற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்  ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும்  ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் நிர்வாக திறன் மேலும் மேம்படும் என கூறினார்.மேலும்  நிதிச்சுமை குறையும். மேலும், பல்வேறு நன்மைகள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் கிடைக்கும் என நாட்டு மக்களிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். மேலும்  நாடு சுதந்திரம் பெற்றபோது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வருமை, பசி, பட்டினி நிலவியது. ஆனால், நாம் நம்மீது நம்பிக்கை வைத்து வளர்ச்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கினோம் என பெருமிதம் தெரிவித்தார்.

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது என்றும்  இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பு சாசனத்தால் உருவாக்கப்பட்ட நெரிமுறைகளே காரணம்என்று கூறிய ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது என்றும் இது வேலைவாய்ப்பு, விவசாயிகள், தொழிலாளர்களின் வருவாயை உயர்த்தி பலரை வறுமையில் இருந்து மீட்டுள்ளது' என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One Nation One Election will reduce financial burden – President


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->