ராஜஸ்தானிலும் ஆப்ரேஷன் தாமரை! சச்சின் பைலட்டுக்கு தூது விட்ட பாஜக! - Seithipunal
Seithipunal


பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன! 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையினால் அசோக் லாட் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும்.

அதன் காரணமாக ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்று போட்டி ராஜஸ்தான் அரசியலை தொற்றிக் கொண்டுள்ளது. அடுத்த முதல்வராக சச்சின் பைலட் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி இருந்தனர். 

ஆனால் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்காதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்சனைக்கு பின்னணியில் அசோக் கெலாட் இருப்பதால் காங்கிரஸ் மேலிடம் அவர் மீது அதிருப்தியில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு ஒரே பதவி என்ற கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை என செய்தியாளர் சந்திப்பில் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார்.இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிட மாட்டார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் பாஜக தரப்பிலிருந்து சச்சின் பைலட்டுக்கு ரகசிய அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி விவகாரம் எனினும் சச்சின் பைலட்டிற்கு பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. பாஜக ஆபரேஷன் தாமரை என்ற வியூகத்தின் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து வருகின்றது. அதே பாணியில் தற்பொழுது சச்சின் பைலட்டுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Operation Lotus in Rajasthan too BJP sent invite Sachin Pilot


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->