திருவள்ளூர் : சுடுகாடு இல்லாததால் உடலை சாலையோரத்தில் வைத்து எரித்து மக்கள் போராட்டம்.!
peoples protest with burning body on road side in tiruvallur
சுடுகாடு இல்லாததால் உடலை சாலையோரத்தில் வைத்து எரித்து மக்கள் போராட்டம்.!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நெமிலிச்சேரி வரை ரூ.364 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை திருவள்ளூரை அடுத்துள்ள காக்களூர் பகுதியில் உள்ள சுடுகாடு வழியாக செல்வதால் சுடுகாட்டின் நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த இடத்தில் உடல்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதற்கு பதிலாக அருகில் உள்ள மற்றொரு சுடுகாட்டை பயன்படுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த சுடுகாட்டை ஏற்கனவே பயன்படுத்தி வரும் மற்றொரு தரப்பினர் காக்களூர் மக்கள் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் காக்களூர் பகுதி மக்கள் தங்களுக்கு தனியாக சுடுகாடு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதற்கிடையே காக்களூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை கிராம மக்கள் 4 வழிச்சாலை பணி நடக்கும் இடத்தில் சாலையோரம் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், திருவள்ளூர் தாலுகா போலீசார் உள்ளிட்டோர் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சுடுகாடு நிலம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
peoples protest with burning body on road side in tiruvallur