வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களுக்கு நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறி வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே கரையைக் கடந்தது.

இந்தப் புயல் வட இந்திய மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், அசாம் மாநிலத்தில் ரீமால் புயல் பாதிப்பால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி, கடந்த 24 மணிநேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் பதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படைகளும், காவல், தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை பிரிவினருடன், உள்ளூர் அரசு நிர்வாகமும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் புயலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோன்று காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi compensation announce floods died peoples


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->