தவெகவின் முதலாம் ஆண்டு விழா - எத்தனை பேருக்கு பாஸ் தெரியுமா?
pass provide to 2000 peoples for particiapate tvk annual day function
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதற்கிடையே புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சமயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது ஆண்டுவிழா பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 26-ந்தேதி காலை 9 மணிக்கு பூஞ்சேரியில் முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் விஜய்யை பார்க்க கூட்டம் அதிக அளவில் கூடும் என்பதால், இரண்டு ஆயிரம் நபர்களுக்கு பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
pass provide to 2000 peoples for particiapate tvk annual day function