சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதிக்கு ஜாமீன் வழங்கிய பெங்களூரு நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சனாதனம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதான ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார். 

இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமாதானம் குறித்த பேச்சுக்கு எதிராக பரமேஷ் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆஜரானார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ. 1 லட்சம் பிணைத்தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam Controversy Bengaluru court granted Udayanidhi bail 


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->