பங்குசந்தையில் சென்செக்ஸ் குறியீடு 174 புள்ளிகள் குறைவு.!
sensex index one hundrad seventy four point down in stock market
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் சென்செக்ஸ் குறியீடு சரிவு கண்டது. இதனால், பங்கு சந்தையில் 174 புள்ளிகள் குறைந்து 61,119.75 புள்ளிகளாக வர்த்தகம் காணப்பட்டது.
இந்த வர்த்தகத்தில் ஜிண்டால் வேர்ல்டு, ஈகுவிடாஸ் வங்கி, என்.எப்.எல்., எச்.டி.எப்.சி. லைப், எஸ்.பி.ஐ. லைப், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.
இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு வர்த்தக ஆரம்பத்தில் 56 புள்ளிகள் சரிவடைந்து, 18,175.75 புள்ளிகளாக காணப்பட்டது. இதன்படி, நிப்டியில் ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கொள்கை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆசிய அளவிலான பங்கு சந்தையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.
English Summary
sensex index one hundrad seventy four point down in stock market