தந்தை ஜீவசமாதி என போஸ்டர் ஒட்டிய சம்பவத்தில் சந்தேகம்; உடலை தோண்டி எடுக்க கேரளா உயர்நீதி மன்றம் அனுமதி..! - Seithipunal
Seithipunal


கேரளாவில் தனது தந்தை ஜீவசமாதி ஆகிவிட்டதாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறித்த சமாதியை தோண்டி எடுக்க உயர்நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. அதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் அத்தியனூரில் உள்ள கவுவிளாகத்தில் கோபன் சுவாமி, 78 என்பவர், கடந்த சனிக்கிழமை அவராகவே ஜீவசமாதி ஆகிவிட்டதாகவும், நெய்யாற்றின்கரையில் தங்கள் தந்தைக்கு 'சமாதி' கட்டியுள்ளதாகவும் அவரது இரு மகன்களான சனந்தன், ராஜசேனன் ஆகிய இருவரும் போஸ்டர் ஒட்டி அறிவிப்பு செய்திருந்தனர்.

கோபன் சுவாமி மரணத்தில் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் எழுந்துள்ளது. தகவலறிந்த போலீசார் சமாதி அமைந்துள்ள இடத்தில் ஆய்வு செய்ய வந்தனர். அப்போது கோபன் சுவாமியின் மகன்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று சமாதி பீடத்தை தோண்டி எடுத்திட ஆட்சியர் உத்தரவு நகலை அவர்களிடம் காண்பித்தனர். 

அதற்கும்  மகன்கள் சம்மதிக்கவில்லை. இது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து தடை கோரிய மகன்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சமாதியை தோண்டி உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் வந்துள்ளனர்.ஆனால் அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சமாதி பீடத்தை நெருங்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து தடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட தன் பேரில் சமாதி பீடத்தை தோண்டு முயற்சியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கோபன் சுவாமி இயற்பெயர் மணியன் என கூறப்படுகிறது. இவர் நெசவுத் தொழிலாளியாக இருந்த பின் ஆன்மீகத்தில் ஆர்வம் காரணமாக தன் பெயரை கோபன் சுவாமி என மாற்றி கொண்டுள்ளார்.

கவுவிளாகத்தில் கைலாச நாதன், மஹாதேவன் என்ற கோயில் கட்டி அங்கு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் கோபன் சுவாமி காணாமல் போனதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் ஜீவ சமாதி ஆகிவிட்டதாக மகன்களால் கூறப்படும் சமாதி பீடத்தில் இருப்பது கோபன் சுவாமி உடல் தானா வேறு நபரா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளதால் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sons who pasted a poster saying that their father had been transformed into a living being


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->