டெல்லியில் பயங்கர நிலநடுக்கம்; வீடுகளை விட்டு அலறி அடித்து ஓடிய மக்கள்!
Strong earthquake hits Delhi; People running out of their homes!
டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தால் அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர்
டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என்று இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் , அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். மேலும் இதேபோன்று, டெல்லியில் ரெயில்வே நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்து உள்ளனர்.எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
English Summary
Strong earthquake hits Delhi; People running out of their homes!