#BigBreaking:: இரட்டை இலை யாருக்கு..? தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி.. 3 நாட்கள் கெடு விதித்தது உச்சநீதிமன்றம்...!!
Supreme Court directed Election Commission give reply regard double leaf
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சந்தேகம் நிலவிவரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் இரட்டை இலை சின்னத்தை இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எங்கள் தரப்பிற்கு ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.
இது முறையீடு தொடர்பாக இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது ஈபிஎஸ் தரப்பினர் முறையீடு மனுவை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 3 நாட்களுக்குள் ஈபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு இந்த மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் என வழக்கை ஒத்தி வைத்துள்ளனர். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால உத்தரவுக்காக மட்டுமே இந்த விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Supreme Court directed Election Commission give reply regard double leaf