குடியரசு தின விழாவை புறக்கணித்த.. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.!
Telangana CM Chandrasekhar Rao boycotted the Republic Day celebrations
தெலுங்கானாவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நாட்டின் 75 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஏற்பாடு செய்யும் குடியரசு தின விழாவை இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.
இதற்கு அம்மாநில காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனை உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஆளுமை தவிர்ப்பதற்காக விழா ரத்து செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
இதனிடையே ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழாவை மாநில அரசு நடத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாநில அரசு குடியரசு தின விழாவை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மாநில அரசு குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால், ஆளுநர் மாளிகையில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி குடியரசு தின விழாவை ஏற்பாடு செய்யாததற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Telangana CM Chandrasekhar Rao boycotted the Republic Day celebrations