கச்சா எண்ணெய் பற்றாக்குறை கிடையாது! மத்திய அரசு விளக்கம்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேல், ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்றும், பிரச்சனை ஏற்படும் என்றும் சர்வதேச வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, கச்சா எண்ணெய் பற்றாக்குறைக்கு கவலைப்பட வேண்டியதில்லை என்று நம்பிக்கைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:

-நாம் கச்சா எண்ணெயை 39 நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்கிறோம். இதற்கு முன்பு 27 நிறுவனங்கள் மூலம் தான் பெற்றிருந்தோம்.சர்வதேச சந்தையில் எண்ணெய் தேவையை விட அதிகமாகவே கிடைக்கிறது. புதிய நிறுவனங்களும் சந்தையில் நுழைந்துள்ளன. எனவே, எங்கும் பற்றாக்குறை இல்லை.

2024 ஜூலை நிலவரப்படி, நாங்கள் கச்சா எண்ணெயின் 44% ரஷ்யாவிடமிருந்து பெற்றுள்ளோம்," என்று அவர் விளக்கமளித்தார்.

இதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பதற்கான காரணங்கள் இருந்தாலும், சர்வதேச சந்தையில் பெரும் பற்றாக்குறை இல்லை என அவர் உறுதியளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There is no shortage of crude oil Central government explanation


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->