4-வது முறையாக தீவிபத்து.. மகா கும்பமேளாவில் கூடாரங்கள் பற்றி எரிந்ததால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


 கும்பமேளா நடைபெறும் பகுதியில் நான்காவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.இங்கு நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளநிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் நான்காவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்ப்வாசி கூடாரம் அருகே இன்று கேஸ் சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனே அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர். மேலும் இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் முகாமில் தீ விபத்து ஏற்பட்டு, அருகிலுள்ள 12 முகாம்களுக்கு பரவியது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.

மேலும் ஜனவரி 19 ஆம் தேதி, செக்டார் 19 இல் சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீ விபத்தில் சுமார் 12 முகாம்கள் எரிந்து நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜனவரி 25 ஆம் தேதி, செக்டார் 2 இல் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில் கார் ஒன்றில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்திற்கும் பரவியது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக கடந்த மாதம் 29 புதன்கிழமைமவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is the fourth time the fire has broken out. Tents set ablaze at Maha Kumbh Mela


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->