லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் - வீடுகளில் விளக்கேற்ற தேவஸ்தானம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்தனர். அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு கலந்து இருப்பது தெரியவந்தது. 

இதேபோல், திருமலை தேவஸ்தானமும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்து இருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதற்காக இன்று கோவிலை சுத்தப்படுத்தி, பரிகார பூஜை, சாந்தி யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்ததற்கு தோஷம் நீக்குவதற்காக, பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

மேலும், வீடுகளில் விளக்கேற்றும் போது "ஓம் நமோ நாராயணாய" என்று மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupathi devasthanam order lamp hoisting in all house for addu issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->