ஒடிசா ரயில் விபத்து.. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை..!! மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்..!!
Union Minister informs odisha train accident recommended for CBI investigation
மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் உடன் மோதியது. அதே இடத்தில் பெங்களூரில் இருந்து ஹவுராவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தற்போது வரை 275 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்திற்கு தொழில் நுட்ப கோளாறு காரணம் என ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இதனை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
English Summary
Union Minister informs odisha train accident recommended for CBI investigation