ஓடும் ரெயிலில் இருந்து குதித்த இளம்பெண் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!
women fell down from train in telungana
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்சால் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 22-ந்தேதி செகந்தராபாத் நோக்கி செல்லும் பயணிகள் ரெயிலில் ஏறி பெண்கள் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அந்த பெட்டியில் பயணித்த பெண்கள் அனைவரும் இறங்கிய நிலையில், இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறியதோடு, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த இளம்பெண், ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
women fell down from train in telungana