இன்றைய ஸ்பெஷல் || அவலில் சூப்பரான ரெசிபி... இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்..!
Aval Poha Recipe
சிவப்பு அவலை சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான ஊட்டசத்துகளை தரும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைஅயை அதிகரிக்க உதவுகிறது. ரத்தசிவப்பணுவில் சுவையான போஹா செய்து சாப்பிடலாம்.
தேவையானவை :
கெட்டி அவல் - ஒரு கப்,
கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலவை - அரை கப்,
கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
சர்க்கரை - சிட்டிகை,
வறுத்த வேர்க்கடலை, முந்திரி - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை :
காய்கறிகளை நறுக்கிகொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். அதனுடன் காய்கறிகளை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பிறகு அவல், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி வேகவைத்து இறக்கும் போது எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.