அன்றாடம் சப்பாத்தியை சாப்பிடலாமா.? உண்மையில் உடல் எடை குறைய உதவுமா.?!
Chappathi help To weight loss
பலரும் உடல் எடையை குறைப்பதற்காக சப்பாத்தியை அன்றாடம் சாப்பிட்டு வருகின்றனர். கோதுமையில் தயாரிக்கப்படும் இந்த சப்பாத்தி மிகவும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த சப்பாத்தி உண்மையில் உடல் எடையை குறைக்க உதவுமா என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு தேவையான ஆற்றலை இது வழங்கும்.
நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைக்க இது உதவுகிறது. எனவே, பசி எடுக்காமல் இருப்பதால் தேவையற்ற பொருட்களை சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இது உதவுகிறது.
மேலும் சப்பாத்தி உடலுக்கு ஆற்றலை வழங்குவதுடன் மனநிலையை மேம்படுத்த உதவும். சப்பாத்தியை எண்ணெய் சேர்க்காமல் சுடும் போது கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை குறைக்க இது உதவுகிறது.
சப்பாத்தி அடிக்கடி சாப்பிடுவது சரும பொலிவுக்கு உதவும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைய இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை இது குறைக்க உதவுகிறது.
செரிமான மண்டலத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. இத்தகைய சப்பாத்தியில் விட்டமின் பி1, பி2, பி3, பி6, பி9, விட்டமின் இ உள்ளிட்டவை இருக்கின்றன.
English Summary
Chappathi help To weight loss