வெள்ளைப்படுதல்... நிறத்தின் மாற்றத்தை வைத்தே கண்டறிந்து சுதாரிப்பது எப்படி?..!!
how to find white discharge by colors of periods
புதிதாக பருவமடைந்துள்ள பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனையை தங்களின் பெண்ணுறுப்பின் மூலமாக எதிர்கொள்வார்கள். பெண்ணாக பிறந்த அனைவரும் தனது வாழ்நாளின் ஒருமுறையாவது இந்த பிரச்சனையால் அவதிற்று இருக்க நேரிடும். வெள்ளைப்படுதல் ஏற்பட்ட பின்னர், சினைப்பையில் இருக்கும் சினை முட்டை வெளியேறி கருப்பையை அடையும் நாளானது, மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் ஏற்படுகிறது.
இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையானது இயல்பான வெண்மையான நிறத்தில் இருக்கும் பட்சத்தில் எந்த விதமான பிரச்சனை கிடையாது. இது மாறாக அடர்த்தியான நிறம், பழுப்பு வெள்ளை மற்றும் வெள்ளை பச்சை, சாம்பல் சிவப்பு, சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டால் கட்டாயம் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. வெள்ளைப்படுதலை நிறத்தினை வைத்து கண்டறியும் சிறு குறிப்பு குறித்து இனி காண்போம்.

அடர்நிறம்:
வெள்ளைப்படுதல் அதிகளவு அடர்த்தியை கொண்டு இருந்தால், உதிரப்போக்கும் கட்டியாக இருக்கலாம். இது பாலடைக்கட்டியை போல இருக்கும். வெண்மையான நிறத்தில் இது இருப்பதால் பெரும்பாலானோருக்கு இது தெரிவதில்லை. இருப்பினும் இவை ஈஸ்ட் மற்றும் காளான் தொற்றுகள் காரணமாக ஏற்படலாம். பெண்ணின் பிறப்புறுப்பில் இயல்பாக அமைந்துள்ள நுண்ணுயிர் கிருமிகளின் காரணமாக இத்தொற்று ஏற்படும்.
இந்த வெள்ளைப்படுத்தலில் அறிகுறிகள் இல்லாமல் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் ஏற்படும் எரிச்சல், அதிகளவு வலி, பிறப்புறுப்பில் கட்டி மற்றும் பிறப்புறுப்பில் புண் போன்றவை உள்ளதா? என்பதையும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.

லேசான மஞ்சள் நிறம்:
இம்முறையிலான வெள்ளைப்படுத்தலில் வெள்ளை நிறத்தில் இருந்து லேசான மஞ்சள் நிறத்தில் மாற்றம் இருக்கும். இதனை சரியாக கவனிக்காத பட்சத்தில் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் கருப்பையில் குறைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பழுப்பு வெள்ளை:
பெண்கள் திருமணத்திற்கு பின்னரும், கருத்தரிப்பு காலத்திலும் பழுப்பு வெள்ளை நிறுத்தினால் ஆன வெள்ளைப்படுதலை உணருகின்றனர். கர்ப்பமாக இருக்கும் 30 விழுக்காடு பெண்கள் பழுப்பு அல்லது சாம்பல் நிறுத்தினால் ஆன வெள்ளைப்படுதலை கவனிக்கலாம். மேலும், திருமண தாம்பத்தியத்திற்கு பின்னர், இது அதிகளவு உணரவும் வாய்ப்புள்ளது. இந்த வகையான வெள்ளைப்படுதல் லேசான துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம்.

பச்சை, சாம்பல், சிவப்பு கலந்த மஞ்சள் நிறம் (Desquamative inflammatory vaginitis):
பெண்கள் தங்களின் இறுதி மாதவிடாய் காலம் மற்றும் இதற்கு முன் உள்ள நேரத்தில் வெள்ளைப்படுதல் மேற்கூறிய நிறத்தில் வெளியேறலாம். பெண்களின் உடலின் சுரந்து வரும் ஈஸ்டிரோஜனின் அளவானது குறையும் நேரத்தில், பெண்ணின் பெண்ணுறுப்பு சிவந்து மற்றும் தடித்து காணப்படும். இந்த சமயத்தில் வெள்ளைப்படுதல் மேற்கூறிய நிறத்தில் வெளியேறி, பிறப்புறுப்பின் வளவலப்புத்தன்மையை அளிக்கும் சுரப்பியில் மாற்றம் ஏற்பட்டு, அதிகளவு வறட்சியை ஏற்படுத்தும்.
கவனிக்க வேண்டியது:
வெள்ளைப்படுதல் இயல்பான நிறத்திலும், மனமற்றும் இருக்கும் பட்சத்தில் சாதாரணமான வெள்ளைப்படுதல் ஆகும். மேலும், நிறம் மாறி மஞ்சள் நிறம், பச்சை நிறம், சிவப்பு கலந்த மஞ்சள், பழுப்பு, அடர்த்தியாக மற்றும் கட்டியாக வெளியேறுதல் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

பெண்ணுறுப்பில் ஏற்படும் கட்டி, பெண்ணுறுப்பின் துர்நாற்றம், சிறுநீர் கழித்தலின் போது வலி, எரிச்சல் போன்றவை கவனித்தில் கொள்ள வேண்டும். அதிகளவு திருநாற்றம் வீசுகிறதா? என்று கவனிக்கவும் வேண்டும். இவ்வாறான பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், மருத்துவரை சந்தித்து தேவையான சிகிச்சை எடுக்க வேண்டும்.
இறுக்கமான உள்ளாடைகளை அணியாமல் இருத்தல், மாதவிடாய் நேரத்தில் நாப்கின்னை மாற்றுதல், தாம்பத்தியத்திற்கு முன்னும் பின்னும் அந்தரங்க உறுப்புகளின் சுத்தம், பிறப்புறுப்பு சுத்தம் போன்றவை மேற்கூறிய பிரச்சனைகளில் இருந்து தவிர்க்க வழிவகை செய்யும். அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
how to find white discharge by colors of periods