பீட்ரூட்டில் கோளா உருண்டையா? வாங்க பார்க்கலாம்.!!
how to make beetroot kola urundai
பீட்ரூட்டில் கோளா உருண்டையா? வாங்க பார்க்கலாம்.!!
மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்னாக்ஸ் சாப்பிட விரும்புவார்கள். அவர்களுக்கு ஈசியாக சுவையாக பத்தே நிமிடத்தில் பீட்ரூட்டை வைத்து கோளா உருண்டை செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்:-
பீட்ரூட்
பூண்டு
பொட்டு கடலை
கருவேப்பிலை
கொத்தமல்லி தழை
வெங்காயம்
பச்சைமிளகாய்
காய்ந்த மிளகாய்
இஞ்சி
சோம்பு
முந்திரி
தேங்காய் துருவல்
உப்பு
மஞ்சள் தூள்
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை கழுவிவிட்டு துருவி வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில், பூண்டு, பொட்டு கடலை, வெங்காயம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, முந்திரி, தேங்காய் துருவல் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் போல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் அந்த பேஸ்டுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை, உப்பு, மஞ்சள் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து அதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்த உருண்டையை போட்டு வேக வைத்து எடுத்தால் கோளா உருண்டை தயார்.
English Summary
how to make beetroot kola urundai