அனைவருக்கும் பிடித்த டேஸ்டியான பிஸ்தா ஐஸ்கிரீம்.! செய்வது எப்படி.?
How to make Pista icecream
அனைவருக்கும் பிடித்த சுவையான பிஸ்தா ஐஸ்கிரீம்.
தேவையான பொருட்கள்:
பால் – 3 கப்
சர்க்கரை – 1 கப்
கார்ன்ஃப்ளார் – 5 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
க்ரீன் கலர் – ஒரு சிட்டிகை
ப்ரெஸ் க்ரீம் – 1 கப்
பிஸ்தா பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பிறகு 5 நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் பாலில் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு சர்க்கரையையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆற வைத்து எசன்ஸ் மற்றும் கிரீன் கலர் சேர்க்கவும்.
பிறகு இந்தக் கலவையை, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக அடித்து, க்ரீம் சேர்க்கவும். பின்பு இந்தக் கலவையை ஃப்ரீஸரில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, வெளியே எடுத்து மறுபடியும் ‘பீட்’ செய்யது, உடைத்த பிஸ்தா பருப்புகளை சேர்க்கவும். பின்பு 8 மணி நேரம் ஃப்ரீஸரில் உறைய வைத்து பரிமாறலாம்.
English Summary
How to make Pista icecream