சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய மருந்து.!
medicine of diabeties patients
சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் தான் ஒரு அருமருந்தாக இருந்து வருகிறது. ஆனால் இது கசப்பு சுவையில் இருப்பதால் பலருக்கு பிடிக்காது. அப்படி உள்ளவர்கள் அடிக்கடி உணவில் பீர்க்கங்காயை சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளின் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
பீர்க்கங்காய் செடியில் உள்ள இலை முதல் விதை வரை அனைத்துமே மருத்துவ குணம் உள்ளதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பீர்க்கங்காய் இலையை எடுத்து சாறு பிழிந்து லேசாக தண்ணீர் விட்டு சூடு படுத்தி தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
பீர்க்கங்காயில் அனைத்து விதமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளிட்டவை அதிகமாக இருந்து வருவதால் உடலை தாக்கும் பல்வேறு தொற்று கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் பீர்க்கங்காயை சாராக குடித்து வந்தால் மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள் குணமடையும்.
English Summary
medicine of diabeties patients