குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட வைக்கும் சூப்பர் ஐடியா..!
Veg Soup Recipe
காய்கறிகள் சாப்பிட வைப்பது தாய்மார்களுக்கு மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சுவையான காய்கறி சூப் செய்து கொடுக்கலாம். எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்
பூண்டு - 1 டீஸ்பூன்
கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் (நறுக்கியது) - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணை - 2 டீஸ்பூன்
வெண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
ஒயிட் சாஸ் தயாரிக்க:
பால் - 1 கப்
மைதாமாவு - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
வெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
முதலில் குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டு வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கள் பச்சைபட்டாணியை சேர்த்து வதக்கி 5 கப் நீர் ஊற்றிகறுப்பு மிளகுத்தூள், உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக வைத்து கொள்ளவும்.
காய்கறிகள் வெந்ததும் அதனை வடிகட்டி காய்கறிகளை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். குக்கரில் வெண்ணெய் போட்டு அது உருகியதும்மைதாமாவு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சோளமாவை கரைத்து சேர்த்து கொள்ளவும்பாலை ஊற்றிக் கட்டி தட்டாமல் நன்கு கலந்து ஒரு கொதி கொதிக்கவிடவும். இது ஓயிட் சாஸ் ஆகும். இதனுடன் காய்கறி வேகவைத்த நீரை சேர்த்து கலக்கினால் சுவையான சூப் தயார்.