தூக்கம் வராம போவதற்கு பின் இப்படி ஒரு விஷயமா.? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்.!  - Seithipunal
Seithipunal


ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு எந்த அளவுக்கு உணவு, உடற்பயிற்சி முக்கியமோ அதே அளவுக்கு ஆழ்ந்த  உறக்கம் மிகவும் அத்தியாவசியம்.

ஒவ்வொரு மனிதர்களும் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை தினமும் நன்றாக தூங்குவதன் மூலம் நம் உடலானது புத்துணர்ச்சி பெறுவதோடு  உடல் உறுப்புகளுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. மேலும், இந்த தூக்கமானதுமனச்சோர்விலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.

நன்றாக தூக்கம் வர இதோ சில டிப்ஸ் : 

நம் உடல் 'சர்க்காடியன் ரிதம்' என்கிற ஒரு இசைவில் இயங்குகிறது. அதாவது உடலின் ஒரு உறுப்பு அல்லது ஹார்மோன் அந்தந்த நேரத்தில் சுரக்கும் அல்லது செயல்படும் நம் எல்லோர் உடலும் இந்த இசைவில் தான் இயங்குகிறது. 

இப்போதுள்ள‌ காலக்கட்டத்தில் யாரும் வெளியில் செல்வதில்லை. ஒரு அறைக்குள்ளேயே அல்லது அலுவலகத்திலேயோ ஒரு நாள் முடிந்து விடுகிறது. அதனால் எது இரவு எது பகல் என்று உடலால் அறிந்துக் கொள்ள முடியாததால் கூட இந்த தூக்கமின்மை பிரச்சனை நிறையப் பேருக்கு இருக்கிறது.

ஆகையால், காலை நேரங்களில்  சூரிய வெளிச்சத்தை அல்லது வெளிச்சமாக உள்ள இடத்தில் சிறிது நேரம் இருப்பதினால். சர்க்காடியன் ரிதம் நன்றாக வேலைச் செய்ய உதவியாக இருக்கிறது.
 
நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த நேரத்திலேயே தினமும் தூங்கி நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் நாம் தினமும் அந்த நேரத்தை கடைப்பிடிக்கும் போது நமது தூக்கமும் எந்த வித தொந்தரவு இல்லாமல் அமையும் .

நமது இரவு தூக்கம் நன்றாக அமைய வேண்டுமானால் நாம் என்ன இரவு உணவை உட்கொள்கிறோம் மற்றும்  என்ன பானம் அருந்துகிறோம் என்பதை  கவனித்துக் கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகாத உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நலம்.

அடிக்கோடாக சமீபத்திய ஆய்வுகள் தெரியப்படுத்துவது நீண்ட நாள் தூக்கமின்மை இதய நோய், உடல் எடைக் கூடுதல் மற்றும் டைப் 2 டயாபட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sleepless issue background information


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->