தமிழக அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் x தளத்தில் பதில்.! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. 

இவ்விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார். காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம்  நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம் சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன் என்று கூறியுள்ளார்.

அத்துடன், இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன். விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் கோரிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay Sethupathis request to the Tamil Nadu government


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->