திமுக அரசுக்கு சிக்கலா? ஆளுநரை சந்தித்த அதிமுக! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தமிழக ஆளுநரை சந்தித்து முக்கிய மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன், பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். 

தமிழக நிதித்துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அவர்கள் வெளியிட்ட அந்த ஆடியோவில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும், மருமகன் சபரீசனும் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாயை சேர்த்து வைத்து விட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆடியோ போலியானது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், சம்பந்தப்பட்ட அமைச்சர் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்தனர்.

அதே சமயத்தில் ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது எந்த வழக்கும் தொடரவில்லை. அவதூறு வழக்கு கூட பதிவு செய்யவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை அவருக்கு வழங்கப்பட்டது.

ஆடியோவில் பழனிவேல் தியாகராஜன் பேசவில்லை என்றால், ஏன் அமைச்சரின் துறை பறிக்கப்பட்டது? என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திமுக மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். 

மேலும் அந்த முப்பது ஆயிரம் கோடி உண்மைதானா? எங்கு சேர்த்து வைத்துள்ளார்கள்? என்ற நேரடி கேள்விகளையும் திமுகவை பார்த்து கேட்க தொடங்கினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ள இந்த நிலையில், தமிழக ஆளுநரை அதிமுக மூத்த நிர்வாகிகள் சற்று முன்பு சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.

மேலும், தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை, செந்தில் பாலாஜி விவகாரம், 30000 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வலியுறுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Complaint to RNRavi for DMK Govt Senthilbalaji case PTR Audio


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->