அதிமுக பொதுக்குழு வழக்கின் இறுதி விசாரணை - உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தி! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூடி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணை முடிவில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளித்தார். 

இதனை எதிர்த்து பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் நடைபெற்ற போது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி இருக்கும் பொழுது ஏன் பொதுச்செயலாளர் தேர்தலில் நடத்த அவசரம் காட்ட வேண்டும் என கேள்வி எழுப்பி, ஓபிஎஸ் மனுவின் மீது பதில் அளிக்குமாறு பழனிச்சாமிக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 21 ஆம் தேதி (நாளை) நடக்கும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபடி நாளை இந்த வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது. 

இதற்கிடையே, நேற்று முன்தினம் பழனிச்சாமியின் சார்பில் "தொண்டர்களின் விருப்பம் மற்றும் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அதிமுகவில் உள்ள அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.  பொதுக்குழு கூட்டுவதற்கு முன்னதாக பன்னீர் செல்வத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை பன்னீர்செல்வம் மீறி உள்ளார். அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற தகுதியற்றவர் ஓ.பன்னீர்செல்வம்" என ஓபிஎஸ் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS vs EPS SC Case final nov


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->