அதிமுகவில் உருவாகிய பி டீம் - ஆவேசமான தங்கமணி, போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுகவின் 51 ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, "திமுக ஆட்சி முடியும்போது 30% வரை மின்கட்டணம் உயர்ந்திருக்கும். அதிமுகவில் பி டீம் உருவாகி உள்ளனர். எத்தனை டீம் வந்தாலும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியை ஒன்றும் செய்யமுடியாது.

ஐந்தாண்டு காலம் மின்சார துறையில், அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைப்படி, ஒரு சிறிய தவறு நடக்காமல், மின்சார வெட்டு இல்லாமல், மின்மிகை மாநிலமாக தமிழகத்தை வைத்திருந்தோம் என்பதை சவாலாக கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

என்னை பவர் புரோக்கர் என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நீங்கள் அரசியல் புரோக்கர்கள். இந்த கட்சியை உடைப்பதற்காக வந்த புரோக்கர்கள் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என்று ஆவேசமாக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மூன்றாக உடைந்துள்ளது என கூறுகிறார். அதிமுக ஒன்றாகதான் உள்ளது. உடைக்க வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும்.

அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி போடும். 

காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை அதிமுக வழங்கியது. இந்த திட்டங்களை திமுகவால் கொடுக்க முடியுமா? திட்டங்களை நிறுத்திவிட்டீர்கள், இதற்கான தக்க பதிலடியை வரும் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Thangamani Say About Ops Side B team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->