சர்ச்சைக்குரிய 30,000 கோடி ஆடியோ.. டெல்லிக்கு பறந்த கடிதம்.. அதிரடி காட்டும் அதிமுக தரப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் முன்னாள் நிதி அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் டெல்லியை சேர்ந்த ஊடகவியாளர் ஒருவருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.  

அந்த ஆடியோவில் உதயநிதியும், சபரீசனும் அவர்களது முன்னோர்களை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். சிறுசிறு குவித்துள்ளனர். அது தோராயமாக ஒரு 30,000 கோடி இருக்கும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் மற்றும் பாரிமுனையில் உள்ள மத்திய லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு தபால் மூலமாக புகார் அனுப்பி இருந்தார்.

அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் அனுப்பிய புகார் மீது சிபிஐ மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து அளித்த புகாரின் பேரில் சிபிஐ நடவடிக்கை எடுக்காததால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய நிதி அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK letter to Supreme Court judges regarding PTR audio


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->