#DMKfiles || உதயநிதி அறக்கட்டளை சொத்துக்கள் முடக்கியதும் அண்ணாமலை போட்ட ட்விட்..!! என்ன சொல்லி இருக்காரு பாருங்க..!!
Annamalai criticized Udhayanidhi Trust frozen assets
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் செயல்பட்டு வரும் உதயநிதி அறக்கட்டளையை நிர்வகிக்கும் கிருத்திகா உதயநிதியின் 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதே போன்று கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்க துறையால் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு DMK files எனும் பெயரில் திமுகவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார். இதற்கு திமுக தலைவர்கள் விளக்கம் கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இதற்கிடையே இன்று அமலாக்கத்துறை உதயநிதி ஸ்டாலின் பெயரில் உள்ள அறக்கட்டளையின் சொத்து முடுக்கப்பட்டதற்கு அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "DMK files குறித்தான ஆவணங்களை வெளியிடக் கோரி திமுக தலைவர்கள் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வரும் நிலையில், திமுக முதல் குடும்பத்தின் முறைகேடான சொத்துக்களை அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்" என கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Annamalai criticized Udhayanidhi Trust frozen assets