தமிழை வியாபாரமாக பயன்படுத்துகிறது திமுக அரசு - பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை.!
annamalai speech about dmk government
திமுக அரசு தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே பயன்படுத்தி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "திருவள்ளூரில், தி.மு.க., அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, தி.மு.க., நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதல்வர் ஸ்டாலின்? என்றுத் தெரிவித்தார்.
English Summary
annamalai speech about dmk government