அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை? தமிழக அரசை எச்சரிக்கும் அண்ணாமலை.!
annamamalai say Chidambaram Temple issue
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு இன்று காலை கோவிலுக்கு வந்தது. கோவிலில் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆய்வு தொடர்பாக கோவில் தீட்சிதர்கள் அறநிலையத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.
அதில், "சட்டப்பூர்வமான குழு ஆய்வுக்கு வந்தால் அனுமதிப்போம். சிதம்பரம் கோவிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது.
தற்போதைய குழு சட்டத்திற்குட்பட்ட குழு அல்ல, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படிந்து ஆய்வுக் குழுவை திரும்பப் பெற வேண்டும்" என்று தீட்சிதர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மே 23ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை திமுக அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள்.
கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலை முற்றுகையிட்டுள்ளது இந்து சமய அறநிலையத் துறை. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை?
தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இந்த திமுக அரசு செய்யும் காரியங்களைக் கண்டு பாஜக அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
English Summary
annamamalai say Chidambaram Temple issue