கவுதமி விலகல்! 10 நாள் முன்பே வந்த மெசேஜ்! புயலை கிளப்பிய வானதி!!
BJP leader vanathi opinion about gauthami allegation
பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கனத்த இதயத்துடன் விளக்குவதாக கவுதமி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுதமியின் நிலத்தை அபகரித்த நபரை தமிழக பாஜக நிர்வாகிகள் பாதுகாப்பதாக அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனிடம் கவுதமி விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் "எனக்கு திருமதி கவுதமி மீது அன்பு, பாசம், அக்கறை எப்போதும் உள்ளது. பாஜகவின் அடிப்படை தொண்டர் போல கட்சிக்காக பணியாற்றிய கவுதமி விலகி இருப்பது மன வேதனை அளிக்கிறது. ஒரு வழக்கு தொடர்பாக அவருடைய உதவியாளர் பத்து நாட்களுக்கு முன்பே எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார்.
இந்த வழக்கில் கட்சி தரப்பிலிருந்து உதவி தேவைப்படுவதாகவும், தமிழக பாஜக நிர்வாகிகள் சிலரை பாதுகாப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கு நான் இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான தகவலை அளிக்குமாறு கேட்டு இருந்தேன்.
மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக தெரியாது. அவரிடம் இந்த விவகாரம் குறித்து முழுமையாக தெரிவித்திருந்தால் கட்சி சார்பில் தேவையான உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால் அதற்குள் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருப்பதை கண்டு நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். இந்த விவகாரத்தில் அவருக்கு தேவையான உதவியை செய்ய நான் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் அவர் என்னை தொடர்பு கொள்ளலாம். நானும் அவளிடம் இதுக்கு தொடர்பாக பேசவுள்ளேன்" என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். நில அபகரிப்பு விவகாரத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டப்பட்டவரை பாதுகாப்பதாக கவுதமி கூறியதாக வானதி சீனிவாசன் தெரிவித்திருப்பது அரசியல்வாதத்தில் புயலை கிளப்பிய உள்ளது.
English Summary
BJP leader vanathi opinion about gauthami allegation